உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரி மோதி வாலிபர் காயம்

லாரி மோதி வாலிபர் காயம்

சின்னசேலம்; சின்னசேலம் ரோமன் கத்தோலி தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் சந்தோஷ் 19, இவர் கடந்த 8ம் தேதி பகல் 1.30 மணியளவில் தனது பைக்கில் சின்னசேலம், அண்ணா நகர் பெட்ரோல் பங்க் அருகே சென்றுள்ளார்.அப்போது பூசபாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் செல்வராஜ் 45, என்பவர் ஒட்டி வந்த லாரி சந்தோஷ் பைக் மீது மோதியுள்ளது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சந்தோஷ் கால்களில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியுள்ளது.இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ