தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றம்
கள்ளக்குறிச்சி, : தென்கீரனுார் ஏரி நிரம்பி உபரி நீர் கோடி வழியாக வெளியேறுவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கல்வராயன்மலை பகுதியில் சில தினங்களாக பருவமழை பெய்து வருவதால் கோமுகி அணை நிரம்பியது. இதனால் இந்த ஆண்டிற்கான சாகுபடி பணிகளுக்கு கோமுகி ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதன் மூலம் நீராதாரம் பெறும் பெரும்பாலான ஏரிகளும் படிப்படியாக நிரம்பி வழிய துவங்கியுள்ளது.தற்போது கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஏரி நிரம்பி, உபரி நீர் கோடி வழியாக வெளியேறுகிறது. இதனால் ஏரி நீர் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.