பாட புத்தகம் வழங்கல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. ஊராட்சி தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பாடபுத்தகங்களை வழங்கினார். துணை தலைவர் சரண்ராஜ், கவுன்சிலர் தனம் மணி முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் அருள்மணி வரவேற்றார். திருநாவுக்கரசு, விஸ்வநாதன் ஆகியோர் கல்வி உபகரண பொருட்களை வழங்கினர்.பள்ளி மேலாண்மை குழு தலைவர் தவமணி, கல்வியாளர் செந்தில்குமார், நாகேஷ், சாந்தி, வார்டு உறுப்பினர்கள் அன்பழகன், ராமு, ஆசிரியர்கள் ேஹமாவதி, சேகர், ராஜாமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.