உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாலி செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை

தாலி செயின் பறிப்பு: மர்ம நபருக்கு வலை

கச்சிராயபாளையம் : பெண்ணிடம் தாலி செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த மட்டிகைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி அம்பிகா, 37; இவர் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் தங்களது விவசாய நிலத்திலிருந்து மாடுகளை ஓட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.மட்டிகைக்குறிச்சி பஞ்சாயத்து கிணறு அருகே சென்றபோது, அவ்வழியே வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம நபர், அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தாலி செயினை பறித்துள்ளார்.திடுக்கிட்ட அம்பிகா தாலி செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார். அதில் தாலி செயின் இரண்டாக அறுந்தது. கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட மர்ம நபர், பாதி செயினுடன் தப்பிச் சென்றார்.இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை