உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மினி வேனில் இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்து சேதம்

மினி வேனில் இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்து சேதம்

கள்ளக்குறிச்சி:' கள்ளக்குறிச்சி அருகே டாடா ஏஸ் வாகனத்தில் இருந்த பொருட்கள் தீ பிடித்து எரிந்தது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த கொங்கராயபாளையம் சேர்ந்த முருகேசன் மகன் செல்லமுத்து, 42; கடந்த 1ம் தேதி ஆயுத பூஜையை முன்னிட்டு தனது டாடா ஏஸ் வாகனத்திற்கு பூஜை செய்து வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்தார். வாகனத்தில் வாகன உதிரி பாகங்கள் வைக்கப்பட்டு இருந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு திடீரென வாகனத்தில் இருந்த சில பொருட்கள் தீயில் எரிந்தது. செல்லமுத்து மற்றும் அக்கம் பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இது தொடர்பாக செல்லமுத்து கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !