உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / போலீசை கண்டித்து தம்பதி தர்ணா; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

போலீசை கண்டித்து தம்பதி தர்ணா; உளுந்துார்பேட்டையில் பரபரப்பு

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில், போலீசாரை கண்டித்து தம்பதி அதிகாலையில் சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.உளுந்துார்பேட்டை அடுத்த அஜீஸ் நகரைச் சேர்ந்தவர் தங்கராசு மகன் சின்னராசு,31; கடைவீதியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர், தனது பல்சர் பைக்கை, 4 மாதங்களுக்கு முன் கார்னேஷன் தெருவைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் புவிராஜா, 27; என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.20 ஆயிரம் பணம் வாங்கினார்.ஒரு மாதத்திற்கு பிறகும் பைக்கை மீட்காததால் புவிராஜா நேற்று முன்தினம் இரவு 10:30 மணியளவில் சின்னராசுவிடம் ஏன் பைக்கை மீட்கவில்லை என கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து சின்னராசுவின் மனைவி கமலி, நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 5:00 மணி அளவில் சின்னராசு, அவரது மனைவி கமலி மற்றும் குழந்தை, தாய், உறவினர்கள் இருவருடன் உளுந்துார்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று, புகார் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கேட்டு 5:45 மணியளவில் தாலுகா அலுவலகம் முன் சென்னை - உளுந்துார்பேட்டை சாலையில் படுத்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம், சப் இன்ஸ்பெக்டர் குமரேசன், நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று 6:00 மணிக்கு தர்ணாவை முடித்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ