அச்சத்தை நீக்கிய தேர்வு
அச்சமின்றி தேர்வு எழுதுவேன்
'தினமலர்' மற்றும் ஏ.கே.டி., கல்வி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வை பயமின்றி எழுதினேன். அரசு சார்பில் நடைபெற உள்ள நீட் மெயின் தேர்வை அச்சமின்றி எழுத மிகவும் உதவியாக இருக்கும். நீட் தேர்வின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் எவ்வாறு இருக்கும் என்ற அனுபவத்தை முன்கூட்டியே இந்த மாதிரி தேர்வு எங்களுக்கு உணர்த்தியுள்ளது.மோகன்தாஸ், கள்ளக்குறிச்சி நேரத்தை பின்பற்ற உதவி
அரசு நடத்தும் நீட் தேர்வுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 'தினமலர்' சார்பில் நடத்தப்பட்ட மாதிரி தேர்வு கால நேரத்தை பின்பற்றி தேர்வெழுத பயனுள்ளதாக இருந்தது. அதாவது, ஒவ்வொரு கேள்விக்கும் பதில் அளிக்க எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தெரியாத கேள்விக்கு அதிக நேரம் யோசிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதை மாதிரி தேர்வு மூலம் தெரிந்து கொண்டேன்.சாந்தினி, கள்ளக்குறிச்சி மெயின் தேர்வுக்கு முன்னோட்டம்
நீட் தேர்வுக்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்பது குறித்து இதுவரை பலர் தெரிவித்துள்ளனர். ஆனால், மாதிரிதேர்வில் தான் நேரடியாக பார்த்து உணர்ந்தேன். கை, கழுத்தில் இருந்த அணிகலன்கள், கயிறுகள் கழற்றப்பட்டு, கடும் கட்டுபாட்டுடன் நடத்திய மாதிரி தேர்வு பதற்றத்தை கொடுத்தாலும், நீட் மெயின் தேர்வை எதிர்கொள்ள முன்னோட்டமாக இருந்தது.தேசிஹா, ரிஷிவந்தியம் கடினமான கேள்விகள்
நீட் மாதிரி தேர்வில் என்.சி.ஆர்.டி., பாடத்திட்டங்களில் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. கேள்விகள் கடினமாக இருந்தது. ஆனாலும், மருத்துவ படிப்பை கனவாக கொண்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு இத்தேர்வு மிகவும் முக்கியமானது. நீட் தேர்வின் போது மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் எவ்வாறு இருக்கும் என்ற அனுபவத்தை முன்கூட்டியே மாதிரி தேர்வு உணர்த்தியுள்ளது.மோஹிந்த், கள்ளக்குறிச்சி ஒத்திகையாக இருந்த தேர்வு
நீட் தேர்வு பற்றி புரிதல் இன்றி வந்த எனக்கு, 'தினமலர்' நாளிதழ் நடத்திய நீட் மாதிரி தேர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்னும் சில நாட்களில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக அரசின் விதிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்ட நீட் மாதிரி தேர்வு எனக்கு ஒத்திகையாக அமைந்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக எனக்கு இருந்த பயம் நீங்கி தெளிவு கிடைத்துள்ளது.விஷாலி, கள்ளக்குறிச்சி