உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிறுமியை கர்ப்பமாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

சிறுமியை கர்ப்பமாக்கியவர் குண்டர் சட்டத்தில் கைது

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் மகன் பாலசக்தி, 22; இவர், 14 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகியதில் சிறுமி 8 மாதம் கர்ப்பமானார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிந்து பாலசக்தியை கடந்த மாதம் 9ம் தேதி கைது செய்து விழுப்புரம், வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.அதனைத் தொடர்ந்து பாலசக்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ராஜ்சதுர்வேதி கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்படி கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில், பாலசக்தி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை வேடம்பட்டு சிறை நிர்வாகத்திடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து, பாலசக்தி வேடம்பட்டு சிறையில் இருந்து கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி