உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.வரஞ்சரம் அடுத்த நின்னையூரை சேர்ந்தவர் முருகன் மகள் நமிதா,17; பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதி விடுமுறையில் வீட்டில் இருந்தார். இந்நிலையில் கடந்த, 4ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !