உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆசிரியர் வீட்டில் திருட்டு 

ஆசிரியர் வீட்டில் திருட்டு 

ரிஷிவந்தியம் : பகண்டை கூட்ரோட்டில், வீட்டின் பூட்டை உடைத்து தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பகண்டை கூட்ரோட்டை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி நித்யா,42; கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி ஆசிரியர். கடந்த, 19ம் தேதி பகண்டை கூட்ரோட்டில் இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த, இரண்டே முக்கால் சவரன், வெள்ளி கொலுசு, மற்றும் ரூ.15 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை