உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மீது வேன் மோதி விபத்து இருவர் பலி; 13 பேர் படுகாயம்

பைக் மீது வேன் மோதி விபத்து இருவர் பலி; 13 பேர் படுகாயம்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பைக் மீது வேன் மோதிய விபத்தில், இருவர் இறந்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த கிளியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன், 19; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் பி.ஏ., முதலாம் ஆண்டு படித்து வந்தார். பல்லவாடியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 55; விவசாயி. இருவரும் நேற்று அதிகாலை 5:30 மணியளவில், 'ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில், தானிப்பாடி சந்தையில் விற்பனைக்காக செடிகளை எடுத்துச் சென்றனர்.திருக்கோவிலுார் - ஆசனுார் சாலையில் செங்கனாங்கொல்லை அருகே சென்றபோது, திருக்கோவிலுாரில் இருந்து கொல்லிமலைக்கு சுற்றுலா சென்ற வேன், பைக் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மணிவண்ணன், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.வேன் டிரைவர் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். அனைவரும் திருக்கோவிலுார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். திருக்கோவிலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை