மேலும் செய்திகள்
ஏர்போர்ட் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
05-Feb-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் -ஆச னுார் சாலை விரிவாக்கப் பணிக்காக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருக்கோவிலுார் - ஆசனூர் சாலையை, 101 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச் சாலையாக அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணி துவங்கப்பட உள்ளது.இதற்காக செட்டித்தாங்கல், ஜி.அரியூர், மேமாளூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான பணிகள் நடந்தன.நேற்று வருவாய்த்துறை, போலீசார் முன்னிலையில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் அனிதா, இளநிலை பொறியாளர் எழிலரசன் மேற்பார்வையில், சாலை பணியாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் ஆக்கிர மிப்புகளை அகற்றினர்.
05-Feb-2025