உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வு

திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணி ஆய்வு

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர பொன்முடி எம்.எல்.ஏ., துறை அமைச்சரிடம் வலியுறுத்தினார். திருக்கோவிலுாரில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரூ. 54 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் பொன்முடி எம்.எல்.ஏ., மற்றும் கலெக்டர் பிரசாந்த் ஆகியோர் மருத்துவமனையை நேரில் பார்வையிட்டனர். அப்பொழுது பணி விரைவாக முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அப்போது, மருத்துவத்துறை அமைச்சர் சுப்பிரமணியனை மொபைல்போனில் தொடர்பு கொண்ட பொன்முடி எம்.எல்.ஏ., மருத்துவமனையை விரைவாக மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்டார். இப்பகுதி மக்களின் மருத்துவ தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் மருத்துவமனையாக இருக்கும் என்பதால், விரைவாக பயன்பாட்டிற்கு கொண்டவர நடவடிக்கை எடுக்கப்படும் என பொன்முடி தெரிவித்தார். ஆய்வின் போது சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், நகராட்சி சேர்மன் முருகன், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி