உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்

ஞானானந்தா நிகேதனில் திருவாசக முற்றோதல்

திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், தபோவனம், ஞானானந்தா நிகேதன், சச்சங்க மண்டபத்தில் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர் உள்ளிட்ட நால்வருடன் அம்பாள் சமேத சிவபெருமான் முருகருடன் அருள் பாலிக்கும் அற்புதக் காட்சி ஆவாகனம் செய்யப்பட்டு, திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேள்வி நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு துவங்கியது.தபோவனம் பிரபவானந்த சரஸ்வதி, சதாசிவகிரி, சமானந்த சரஸ்வதி, ராமானந்தகிரி சுவாமிகள் தலைமை தாங்கி, சிவபஞ்சாசன பூஜைகள் செய்தனர். திருச்சி திரிசிரபுரம் சிவனடியார்கள் குழு, ஆற்காடு சோமவார வழிபாட்டு அன்பர்கள் குழு, நெய்வேலி சிவனடியார்கள் திருக்கூட்டம், பண்ணிசை மகளிர் குழு மற்றும் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த சிவனடியார்கள் பலரும் கலந்து கொண்டனர்.தேனி சமாநந்த சரஸ்வதி சுவாமிகள், மதுரை அம்ருதேச்வரானந்த சுவாமிகள், ஞானமயானந்தா சுவாமிகள் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருவாசக முற்றோதல் ஞானப் பெருவேல்வியை மாலை 5:00 மணி வரை இடைவிடாது நிகழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி