உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  சங்கராபுரம் அரசு பழங்குடியினர் பள்ளியில் தொல்குடி திருவிழா

 சங்கராபுரம் அரசு பழங்குடியினர் பள்ளியில் தொல்குடி திருவிழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் தொல்குடி திருவிழா நடந்தது. சங்கராபுரம் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் நடந்த திருவிழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் சந்திரசேகரன் தலைமை தாங்கி விழாவினை துவக்கி வைத்தார். ஒருங்கிணைப்பாளர் யுவராணி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதன்பின் மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சி நடந்தது. சிறப்பாக பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் ஏழுமலை, சித்ரா, செல்லம், கனல், ராஜேஸ்வரி, அமுதா, கலையரசி மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி