உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டேங்கர் லாரி - கார் மோதல் பெண் உட்பட 3 பேர் பலி

டேங்கர் லாரி - கார் மோதல் பெண் உட்பட 3 பேர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே முன்னால் சென்ற டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் இறந்தனர். சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சந்தோஷ், 28; 'ஏசி' மெக்கானிக். அதே பகுதியை சேர்ந்தவர் சூர்யா, 24. கடலுார், பாதிரிக்குப்பத்தை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி, 55; இவர், சந்தோஷின் பெரியம்மா. இவர்கள் மூவரும், நேற்று காலை, கடலுார், பாதிரிக்குப்பத்தில் இருந்து டவேரா காரில் சேலம் நோக்கி சென்றனர். காரை சந்தோஷ் ஓட்டினார். காலை, 8:00 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், 35 டன் தார் லோடுடன் சேலம் நோக்கி சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கம் மோதியது. பழைய மாடல் கார் என்பதால் உயிர்காக்கும், 'ஏர்பேக்' இல்லை. அதனால், சந்தோஷ், சூர்யா, பாக்கியலட்சுமி மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். எலவனாசூர்கோட்டை போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ