உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

அருவியில் நீர் வரத்து அதிகரிப்பு சுற்றுலா பயணிகள் உற்சாகம்

கச்சிராயபாளையம்: கல்வராயன் மலை நீர் வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். கல்வராயன் மலையில் பல்வேறு அருவிகள் உள்ளன. இதனை கான பல்வேறு இடங்களிலிருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் கல்வராயன் மலைக்கு வந்து செல்கின்றனர். கோடை காலம் துவங்கியதை ஒட்டி கல்வராயன் மலையில் உள்ள நீர் வீழ்ச்சிகளில் நீர் வரத்து குறைந்தது. இதனால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது.இந்நிலையில் கல்வராயன் மலையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்தது. வந்தது. இதனால் மலைப்பகுதி நீரோடைகளில், நீர் வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக பெரியார் அருவியில் குளிப்பதற்கு ஏதுவாக நீர் வரத்துவங்கி உள்ளது. இதனால், கல்வராயன் மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர். இந்நிலையில் இங்கு சுற்றுலாவிற்கு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ