ஸ்கூட்டி மீது டிராக்டர் மோதல்
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி, மாவட்டம், கச்சிராயப்பாளையம் அடுத்த மாதவச்சேரியை சேர்ந்தவர் கண்ணன், 42; விவசாயி. இவர், நேற்று காலை தன் மனைவி சுபா, 35, மகன் கவுதம், 7, ஆகியோருடன், 'ஹீரோ பிளசர்' ஸ்கூட்டியில் சித்தலுார் அம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தார்.மதியம் 12:25 மணியளவில், கள்ளக்குறிச்சி காந்தி ரோடு தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது, பின்னால் வந்த கரும்பு டிராக்டர், கண்ணன் ஓட்டிச் சென்ற ஸ்கூட்டி மீது மோதியது. இதில், சுபா மற்றும் கவுதம் ஆகியோர் மீது டிராக்டர் டிரெய்லர் சக்கரம் ஏறியதில், இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கண்ணன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.கள்ளக்குறிச்சி போலீசார், சுபா, கவுதம் உடல்களை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கண்ணன் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகின்றனர்.