மேலும் செய்திகள்
ஜாக்டோ - ஜியோ ஆர்ப்பாட்டம்
26-Feb-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில், தொழிற்சங்க பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் கட்டுமானம், அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தனி துறை உருவாக்க வேண்டும். நலவாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ. திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நலவாரியத்தில் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.3,000 உயர்த்தி வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கனவு இல்ல திட்டத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.மாநில நிர்வாகிகள் ராமன், செல்வம், சீனிவாசன், கோவிந்தசாமி, மாவட்ட நிர்வாகிகள் காளியப்பன், பாஸ்கர், மகேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து, இக்கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுத்தனர்.
26-Feb-2025