வியாபாரிகள் நலச்சங்க கூட்டம்
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி பஞ்சாயத்து யூனியன் கட்டடத்தில் மாவட்ட நடைபாதை வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா, பொருளாளர் குமார் முன்னிலை வகித்தனர். சட்ட ஆலோசகர் சுரேஷ் முருகன் வரவேற்றார். போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு கடைகளை அமைக்க வேண்டும். சாலையோரங்களில் அளந்து போடப்பட்டுள்ள கயிறு, கோடுகளுக்கு உள்ளேயே நடைபாதை கடைகளை அமைக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் பெறுவதற்கான அனைத்து முயற்சிகள் மேற்கொள்வது உள்ளிட்ட தீரமானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. சங்க துணை தலைவர் ஞானசேகர் நன்றி கூறினார்.