உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

சாலையில் விழுந்த மரத்தால் போக்குவரத்து பாதிப்பு

திருக்கோவிலூர் : திருக்கோவிலுார் பகுதியில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக வேட்டவலம் சாலையில் விழுந்த புளிய மரத்தை தீயணைப்புத்துறையினர் போலீசாருடன் இணைந்து அகற்றினர். திருக்கோவிலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் கன மழை பெய்ய துவங்கியது. லேசான காற்றுடன் தொடர்ச்சியாக மழை பெய்த நிலையில், திருக்கோவிலுார் - வேட்டவலம் சாலையில், நாயனுார் அருகே புளியமரம் ஒன்று சாலையில் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த அரகண்டநல்லுார் போலீசார் மற்றும் திருக்கோவிலுார் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று புளிய மர கிளைகளை இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து, ஜே.சி., பியால் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ