விவசாயிகளுக்கு பயிற்சி
கள்ளக்குறிச்சி: தச்சூரில் வேளாண் கல்லுாரி மாணவர்களின் கரும்பு மறுதாம்பு குறித்த பயிற்சி மற்றும் உணவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த தச்சூரில், வேப்பூர் ஜே.எஸ்.ஏ., வேளாண் கல்லுாரி மாணவ - மாணவியர் தங்கி கிராமப்புற வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விவசாய நிலங்களில் இயற்கை முறையிலான வேளாண் சாகுபடி முறைகளில் கரும்பு மறுதாம்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். அதேபோல கல்லுாரி மாணவியர், அரசு துவக்கப் பள்ளியில் உணவின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் வேளாண் கல்லுாரி மாணவர்கள் திருப்பதி, சஞ்ஜய்முருகன், சந்தோஷ், சாரதி, செந்தில்பாஸ்கர், சுதர்சன், தமிழ்வாணன், செல்வமணி, மாணவியர் லோக்பினா, லக்ஷியா, கீர்த்தனா, மதுமிதா, கவியரசி, லஷ்மிதேவ், கவுசிகா, லிங்கதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.