மேலும் செய்திகள்
முன்னாள் படை வீரர்கள் மானிய கடன் பெற அழைப்பு
24-Sep-2024
கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களுக்கு பல்வேறு விதமான தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் இளம் வயதிலேயே ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் படைவீரர்களின் விருப்பத்திற்கேற்ப திறன் பயிற்சி வழங்கப்படுகிறது.இதன் மூலம் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெறும் விகிதம் அதிகரிப்பதுடன், சுயதொழிலும் தொடங்கலாம்.இத்திட்டத்தின் கீழ் நகை மதிப்பீட்டாளர், ஆடு வளர்ப்பு, 'ஏசி' மற்றும் ப்ரிட்ஜ் சரிசெய்தல், சுற்றுலா வழிகாட்டி, ஓட்டுநர் பயிற்சி போன்ற பல்வேறு விதமான தொழில் பயிற்சிகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திறன் மேம்பாட்டு கழக உதவி இயக்குநரால் விழிப்புணர்வு கருத்தரங்கு கூட்டம் வரும் 25ம் தேதி மாலை 3:00 மணிக்கு நடைபெற உள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, விருப்பமுள்ள முன்னாள் படைவீரர்கள் கூட்டத்தில் பங்கேற்று பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
24-Sep-2024