உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிரான்ஸ்பார்மர் திறன் மேம்படுத்தும் பணி

டிரான்ஸ்பார்மர் திறன் மேம்படுத்தும் பணி

கள்ளக்குறிச்சி,; நாகலுார் துணை மின்நி லையத்தில் டிரான்ஸ்பார்மர் திறன் மேம்படுத்தும் பணி நடக்க உள்ளதால் 21 கிராமங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மின்வாரிய செயற்பொறியாளர் கணேசன் செய்திக்குறிப்பு; நாகலுார் துணை மின் நிலையத்தில் 10 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், 16 மெகா வோல்ட் ஆம்பியராக மேம்படுத்தும் பணி இன்று 26ம் தேதி துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. இதனால், நீலமங்கலம், நிறைமதி, முடியனுார், விருகாவூர், சித்தலுார், குடியநல்லுார், வேங்கைவாடி, வடபூண்டி, பெருவங்கூர், நாகலுார், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், கூத்தக்குடி, கொங்கராயபாளையம், குரூர், மரூர், சேதுவராயகுப்பம், வேலாக்குறிச்சி, பொரசக்குறிச்சி, சாத்தனுார், தண்டலை ஆகிய கிராமங்களில் அவ்வப்போது மின்தடை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ