உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து ஏட்டு சஸ்பெண்ட்

விவசாயிகளிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து ஏட்டு சஸ்பெண்ட்

திருக்கோவிலூர்; திருக்கோவிலுாரில், விவசாயிடம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து ஏட்டுவை, கள்ளக்குறிச்சி எஸ்.பி., சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டம், கொனக்கலவாடியைச் சேர்ந்த விவசாயிகள் இருவர் விவசாய மின் மோட்டார் வாங்குவதற்காக கடந்த 2ம் தேதி பைக்கில் திருக்கோவிலுார் சென்றனர். நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் அருகே பணியில் இருந்த ஏட்டு ரமேஷ், விவசாயிகள் வந்த பைக்கை மறித்து ஆவணங்களை கேட்டார். பைக் சமீபத்தில் சென்னையில் வாங்கப்பட்டது எனவும், இன்னும் பெயர் மாற்றம் செய்யவில்லை அதற்கான ஆவணங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்தனர். அவர்களை போலீஸ் ஸ்டேஷன் அறைக்கு அழைத்துச் சென்று பல்வேறு கேள்விகளை கேட்டு அவர்களிடமிருந்து ஏட்டு ரமேஷ் 200 ரூபாய் பணம் லஞ்சம். விவசாயிகளிடம் ஏட்டு ரமேஷ் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது பற்றி கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி., மாதவன் விரிவான விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில், ஏட்டு ரமேஷை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !