மேலும் செய்திகள்
கரட்டுப்பாளையத்தில் காயா மரக்கன்றுகள்
12-Oct-2025
கள்ளக்குறிச்சி: வாணியந்தல் கிராமத்தில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழாவினை ஒன்றிய சேர்மன் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி அடுத்த வாணியந்தல் கிராமத்தில் ஏரிக்கரை பகுதிகள் உள்ளிட்ட கிராம பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் தலைமை தாங்கி, மரக்கன்றுகள் நட்டு துவக்கி வைத்தார். தி.மு.க., வடக்கு மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நீர் மேலாண்மை மற்றும் பொதுமக்களுக்கு பயன்தரக்கூடிய நீர் மருது, இலுப்பை, நாவல் உள்ளிட்ட 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் ஊராட்சி தலைவர் மணிவண்ணன், துணை தலைவர் மீனாட்சிபாலு உட்பட வார்டு கவுன்சிலர்கள், பொதுமக்கள், கிராம இளைஞர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
12-Oct-2025