உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மரக்கன்றுகள் நடும் விழா

மரக்கன்றுகள் நடும் விழா

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி அடுத்த குதிரைச்சந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் மணிமாறன் தலைமை தாங்கினார். பள்ளி சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் அனந்தகிருஷ்ணன், உதவி தலைமை ஆசிரியர்கள் ஆனந்த ஜோதி, ஹெலன் ஜெயா முன்னிலை வகித்தனர். பள்ளி வளாகத்தில் நிழல் தரும் 11 மகாகனி மரக்கன்றுகளை ஆசிரியர்கள் நட்டு வைத்தனர். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ