உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முன்னாள் தி.மு.க., மூத்த  நிர்வாகிக்கு நினைவஞ்சலி 

முன்னாள் தி.மு.க., மூத்த  நிர்வாகிக்கு நினைவஞ்சலி 

தியாகதுருகம்; தியாகதுருகம் தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் நினைவஞ்சலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தியாகதுருகம் தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பொன் ராமகிருஷ்ணனின், 5ம் ஆண்டு நினைவு நாளை யொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். முன்னாள் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சதா மகாலிங்கம், மவுண்ட் பார்க் சி.பி.எஸ்.இ., பள்ளி சேர்மன் அரவிந்தன், ஆரிய வைசிய சங்க தலைவர் அபரஞ்சி, பேரூராட்சி கவுன்சிலர் ராஜசேகர், கோவிமுருகன் முன்னிலை வகித்தனர்.பொன் ராமகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர் அமுதா, விசு, சசி, தனமூர்த்தி ஐ.டி.ஐ., தாளாளர் பழனிவேல், பாலாஜி, சண்முகம், சம்பத், கேசவன், வெங்கடேசன், ஆறுமுகம், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை