உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வள்ளலார் பள்ளியில் முப்பெரும் விழா

 வள்ளலார் பள்ளியில் முப்பெரும் விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் வள்ளலார் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது. வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு, சர்தார் வல்லபாய் படேலின் 150 ஆண்டு, குழந்தைகள் தின விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ் தலைமை தாங்கினார். வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜய்குமார், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்தர்ராஜன், தமிழ் படைப்பா ளர் சங்க செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார்.பேரூராட்சித் தலைவர் ரோஜாரமணி விழாவை துவக்கி வைத்தார். மாவட்ட முத்தமிழ் சங்க தலைவர் முருககுமார், சங்கை திருக்குறள் பேரவை செயலாளர் லட்சுமிபதி, இன்னர்வீல் கிளப் தலைவி இந்துமதி, இன்னர்வீல் கிளப் முன்னாள் தலைவர் தீபா சுகுமார் சிறப்புரையாற்றினர். குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு ரோட்டரி தேர்வு தலைவர்கள் சங்கர், துரை, ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி மற்றும் ஓய்வூதியர் சங்கத் தலைவர் கலியமூர்த்தி, அரிமா மாவட்ட தலைவர் வேலு ஆகியோர் பரிசுகள் வழங்கினர். பள்ளி தலைமை ஆசிரியை குமாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ