உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / லாரிகள் மோதி விபத்து: கிளீனர் பரிதாப பலி

லாரிகள் மோதி விபத்து: கிளீனர் பரிதாப பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே டாரஸ் லாரி பின்னால் ஈச்சர் லாரி மோதிய விபத்தில் கிளீனர் இறந்தார். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுல்தான், 48; டிரைவர். இவர், சென்னையில் இருந்து பிளைவுட் லோடு ஏற்றிக்கொண்டு டாரஸ் லாரியை கோயம்புத்துார் நோக்கி ஓட்டினார்.நேற்று அதிகாலை காலை 2:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சென்னையில் சோப்பு ஆயில் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்ற ஈச்சர் லாரி, டாரஸ் லாரியின் பின்னால் மோதியது.இந்த விபத்தில் ஈச்சர் லாரி டிரைவரான ஈரோடு மாவட்டம், நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி, 50; கிளீனர் வெங்கடேஷ், 32; ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கினர். இதில் வெங்கடேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இடிபாடுகளில் சிக்கிய சக்திவேலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை