மேலும் செய்திகள்
உலக காசநோய் தின விழா
25-Mar-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடந்தது. இதில், கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆலோ சனைகள் வழங்கப்பட்டன. முன்னதாக, அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி ஏற்றுக்கொண்டனர்.தொடர்ந்து, காசநோய் இல்லா, 45 ஊராட்சிகளுக்கு வெள்ளி மற்றும் வெண்கலம் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் காசநோய் ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய அரசு சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருத்துவ கல்லுாரி டாக்டர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாலினி, துணை இயக்குனர் சுதாகர், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
25-Mar-2025