உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிராவல் மண் திருட்டு இரண்டு பேர் கைது

கிராவல் மண் திருட்டு இரண்டு பேர் கைது

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே கிராவல் மண் திருடிய இருவரை போலீசார் கைது செய்து, லாரி, பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனர். சின்னசேலம் அடுத்த ராயர்பாளையம் மயூரா ஆற்றுக்கு அருகே அனுமதியின்றி கிராவல் மண் எடுப்பதாக போலீசார் மற்றும் வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று முன்தினம் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, உலகியநல்லுாரை சேர்ந்த பெருமாள் மகன் செல்வராஜ், 34; அம்மகளத்துாரை சேர்ந்த வெங்கடேசன் மகன் கந்தசாமி, 35; ஆகிய இருவரும் அரசு அனுமதியின்றி டிப்பர் லாரியில் கிராவல் மண் திருடியது தெரிந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அங்கிருந்த பொக்லைன் இயந்திரம், 2 யூனிட் கிராவலுடன் கூடிய டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ