உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / இரு பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

இரு பைக்குகள் மோதல்: ஒருவர் பலி

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.உளுந்துார்பேட்டை தாலுகா, பின்னல்வாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன், 32; கூலித்தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் எலவனாசூர்கோட்டையில் இருந்து பாத்திமா தக்கா அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்ப்புறத்தில், எலவனாசூர்கோட்டை அடுத்த இ.என்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், 32; மற்றும் அவரது நண்பர் அய்யப்பன்,34; ஆகிய இருவரும் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.இந்த இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதியதில், குபேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சக்திவேல், அய்யப்பன் ஆகிய இருவரும் உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி