மேலும் செய்திகள்
சாராயம் விற்றவர் கைது
02-Nov-2024
கச்சிராயபாளையம்: கல்வராயன் மலையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த இரண்டு நாட்டு துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை, கரியாலுார் சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று காலை தெற்குபட்டி, கெடார், சின்னதிருப்பதி உள்ளிட்ட இடங்களில் கள்ளச்சாராய சோதனையில் ஈடுபட்டனர்.தெற்குபட்டி, காட்டுகொட்டாய் பகுதியில் சேர்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தன்,48, என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது , வீட்டின் பின்புறம் எஸ்.பி.எம்.எல்., வகை ஒற்றைக்குழல் வகையிலான 2 நாட்டு துப்பாக்கிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இரு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் கோவிந்தனை கைது செய்து விசாரிக்கின்றனர்.
02-Nov-2024