உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சிலைகள் பாதுகாப்பு இரண்டு மாவட்ட எஸ்.பி.,க்கள் ஆய்வு

விநாயகர் சிலைகள் பாதுகாப்பு இரண்டு மாவட்ட எஸ்.பி.,க்கள் ஆய்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் மற்றும் அரகண்டநல்லுார் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரண்டு மாவட்ட எஸ்.பி.,க்கள் நேரில் ஆய்வு செய்தனர். திருக்கோவிலுார் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்படும் விநாயகர் சிலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் ஊர்வல ஏற்பாடுகள் குறித்து கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து விநாயகர் ஊர்வலம் செல்லும் தெற்கு வீதி, வடக்கு வீதி மற்றும் நான்கு முனை சந்திப்பு, விழுப்புரம் மாவட்ட எல்லையான மணம்பூண்டி, அரகண்டநல்லுார் வரை சென்றார். அங்கு விழுப்புரம் எஸ்.பி., சரவணன் உடன் சேர்ந்து இரண்டு மாவட்டங்களில் இருந்து வரும் விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்யும் அந்திலி அள்ளித் தாமரை ஏரியை பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழுப்புரம் ஏ.எஸ்.பி., ரவீந்திர குமார் குப்தா, திருக்கோவிலுார் டி.எஸ்.பி., பார்த்திபன் மற்றும் போலீசாருடன் ஆலோசனை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி