உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  ரயிலில் இருந்து விழுந்த இருவர் பலி

 ரயிலில் இருந்து விழுந்த இருவர் பலி

உளுந்துார்பேட்டை: கடலுார் மாவட்டம், கொ.கொத்தனுாரை சேர்ந்தவர் பாலாஜி, 33. அதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி, 29. இருவரும் சென்னையில் தனியார் கல்லுாரியில் சமையலர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இருவரும் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், செங்குறிச்சியில் ரயில் வந்தபோது, இருவரும் ரயிலில் இருந்து தவறி விழுந்தனர். படுகாயமடைந்த இருவரும் உயிரிழந்தனர். விருத்தாசலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி