உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் நிவாரண உதவி

உலகளந்த பெருமாள் கோவில் நிர்வாகம் நிவாரண உதவி

திருக்கோவிலுார் : மழை வெள்ளத்தால் பாதித்த அரகண்டநல்லுார் பச்சையம்மன் கோவில், புதுநகர் பகுதி மக்களுக்கு திருக்கோவிலுார் திருவிக்ரம சுவாமி தேவஸ்தானம் சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது.அரகண்டநல்லுார், பச்சையம்மன் கோவில், புதுநகர் பகுதியில் வெள்ளத்தால் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த மக்களுக்கு திருக்கோவிலுார் திருவிக்ரம சுவாமி தேவஸ்தானம் சார்பில், ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரிய சுவாமிகள், தேவஸ்தான ஏஜன்ட் கோலாகலன் ஆகியோர் பாதிக்கப்பட்ட 100 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினர். நகரமன்ற தலைவர் முருகன், முன்னாள் பேரூராட்சி துணை சேர்மன் குணா, நகர செயலாளர் கோபி, கவுன்சிலர் சக்தி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ