உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை, செஞ்சியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

உளுந்துார்பேட்டை, செஞ்சியில் ஆர்.எஸ்.எஸ்., ஊர்வலம்

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை மற்றும் செஞ்சியில் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்.,) சார்பில் ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் நடந்தது.ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு மற்றும் விஜயதசமி விழாவை முன்னிட்டு சுதேசி வாழ்வியல், இந்து குடும்ப நலன், இயற்கையோடு இசைந்த வாழ்வு, சமுதாய நல்லிணக்கம், குடிமக்கள் கடமைகள் ஆகிய 5 மாற்றங்களை நோக்கி அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் மணிக்கூண்டு திடலில் பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.முன்னதாக ஊர்வலம் ஆதிலட்சுமி திருமண மண்டபத்தில் இருந்து துவங்கியது. ஊர்வலத்தை முன்னாள் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக் குமாரசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தார். ஊர்வலம் முக்கிய சாலை வழியாக மணிகூண்டு திடலை அடைந்தது.அங்கு நடந்த பொதுக் கூட்டத்திற்கு ரோட்டரி சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் அசோக்குமார் சோரடியா தலைமை தாங்கினார். உளுந்துார்பேட்டை சைவ சித்தாந்த பேரவை அமைப்பாளர் வைத்தியலிங்கம் முன்னிலை வகித்தார். மாநில சேவை துறை இணை பொறுப்பாளர் ராஜராஜன் சிறப்புரையாற்றினார்.ஏ.டி.எஸ்.பி., மணிகண் டன் மற்றும் டி.எஸ்.பி., பிரதீப் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செஞ்சி

செஞ்சியில் திருவண்ணாமலை சாலை 'பி'ஏரி அருகில் இருந்து 4:00 மணிக்கு ஊர்வலம் துவங்கியது. ஊர்வலத்தை நாட்டார்மங்லம் ராஜா தேசிங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் பாபு துவக்கி வைத்தார்.சீருடை அணிந்த 400க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் தேசூர் பாட்டை, சிங்கவரம் ரோடு, காந்தி பஜார், விழுப்புரம் ரோடு, சத்திர தெரு வழியாக சென்று திருவண்ணாமலை சாலையில் முடித்தனர்.அங்கு மாலை 5:30 மணியளவில் ஆர்.எஸ்.எஸ்., கொடியேற்றத்துடன் பொதுக்கூட்டம் நடந்தது.ஓய்வு பெற்ற ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அறவாழி தலைமை தாங்கினார். தரணி இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். வட தமிழக மாநில மக்கள் தொடர்பு பொறுப்பாளர் கல்யாண்ஜி சிறப்புரையாற்றினார்.ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் ராஜநந்தகுமார், செயலாளர் வெங்கடேசன், பொறுப்பாளர் நாராயணமூர்த்தி மற்றும் பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., - இந்து முன்னணி மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி