உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திருமணமாகாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

திருமணமாகாத ஏக்கம் டிரைவர் தற்கொலை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் திருமாணமாகாத ஏக்கத்தில் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி ஏமப்பேர் தென்கீரனுார் ரோட்டை சேர்ந்த செல்லான் மகன் பெரியசாமி, 29; லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த பெரியசாமி, கடந்த மாதம் 30ம் தேதி அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வைத்திருந்த குருணை மருந்து குடித்தார். மயங்கி கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பெரியசாமி இறந்தார். இது குறித்த புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை