உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

கோழிகளுக்கு தடுப்பூசி முகாம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் இருவார தடுப்பூசி முகாம்கள் நாளை இன்று (1-ம் தேதி முதல்) பிப்.14 வரை கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோழி வளர்ப்போருக்கு ராணிகட் எனப்படும் வெள்ளைக்கழிச்சல் நோய் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனை கட்டுப்படுத்த கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கிராமங்களில் இன்று (1-ம் தேதி )முதல் வரும் பிப்.14 வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசிமுகாம்கள் நடத்தப்படுகிறது. கோழிகளை வளர்க்கும் மக்கள் இந்த முகாம்களில் கலந்துகொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு பயனடைய வேண்டும். இதனால் கோழிகளின் இறப்பினை தவிர்த்து, கோழி வளர்ப்பில் அதிக லாபம் பெற முடியும். மேலும், விபரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை