உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டிராக்டர் டிரைவர் கொலை வழக்கில் வடபொன்பரப்பி வாலிபர் கைது

டிராக்டர் டிரைவர் கொலை வழக்கில் வடபொன்பரப்பி வாலிபர் கைது

மூங்கில்துறைப்பட்டு, : வடபொன்பரப்பி காப்புக் காட்டில் டிராக்டர் டிரைவர் கொலை வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வடபொன்பரப்பி அடுத்த ராயசமுத்திரத்தை சேர்ந்தவர் பிச்சைக்காரன் மகன் வெங்கடேசன், 37; டிராக்டர் டிரைவர். இவர், கடந்த 3ம் தேதி விவசாய வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மறுநாள் 4ம் தேதி வடபொன்பரப்பி காப்பு காட்டில் கத்தி வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார்.இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்கு பதிந்து, டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில், கிடைத்த தகவலின்பேரில், பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த தனபால் மகன் தமிழ்ச்செல்வன்,27; என்பவரை பிடித்து விசாரித்தனர். அதில், சம்பவத்தன்று இருவரும் காப்புக்காட்டில் மது அருந்தியபோது, வெங்கடேசன் அணிந்திருந்த ஒரு சவரன் செயினுக்காக கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது.அதன்பேரில் போலீசார், தமிழ்ச்செல்வனை நேற்று கைது செய்தனர். மேலும், அவர் கொலை செய்ய பயன்படுத்தி கத்தி மற்றும் கொள்ளை அடித்த செயினை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Radhakrishnan Seetharaman
நவ 09, 2024 12:35

குற்றவாளிகளின் முகத்தைக் காட்டினால் மக்கள் முன்ஜாக்கிரதையுடன் இருக்க முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை