உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா

சங்கராபுரம் : வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சங்கராபரம் வள்ளலார் மன்றத்தில் வைகாசி மாத பூச விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு முத்துகருப்பன் தலைமை தாங்கினார். லயன்ஸ் சங்க தலைவர்கள் வேலு, ஏழுமலை, மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி முன்னாள் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். மோட்டார் வாகன சங்க செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். பாலப்பட்டு தலைமையாசிரியர் வெங்கடேசன், தமிழாசிரியர் இளையாப்பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பிரார்த்தனையில் அனைத்து வியாபாரிகள் சங்க செயலர் குசேலன், ஜெய்பிரதர்ஸ் நற்பணி மன்ற நிறுவனர் விஜயகுமார், தமிழ்படைப்பாளர் சங்க இணை செயலாளர் சக்திவேல், சீத்தா தங்கமணி, பேரவை செயலர் லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜோதி தரிசனத்தை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.வள்ளி விஜயகுமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை