உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தலைக்குப்புற கவிழ்ந்த வேன்: 10 பேர் உயிர் தப்பினர்

தலைக்குப்புற கவிழ்ந்த வேன்: 10 பேர் உயிர் தப்பினர்

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே டயர் வெடித்து, தலைக்குப்புற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.கும்பகோணத்தை சேர்ந்தவர் கிஷோர், 47; டிரைவர். இவர், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த 18 பேரை வேனில் அழைத்துக்கொண்டு, நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்காக காஞ்சிபுரம் நோக்கி சென்றார். பகல் 11:20 மணியளவில், உளுந்துார்பேட்டை அடுத்த சிறுத்தனுார் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது வேன் டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பட்டை இழந்த வேன், சென்டர் மீடியனில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது. விபத்தில் வேனில் இருந்த வீரய்யன் மனைவி குணமல்லி, 42; கோபிநாத், 40; ஜெயராம் மனைவி காந்தலட்சுமி, 36; முரளி மனைவி கோகிலா, 36; உட்பட 10 பேர் காயமடைந்தனர். அவர்களை, அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.திருநாவலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை