மேலும் செய்திகள்
பைக் திருட்டு..
17-Jan-2025
சங்கராபுரம் : சங்கராபுரத்தில் வி.சி., கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலுர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கைகளத்துார் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சமாதான பேச்சுவார்த்தைக்கு சென்றபோது படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து சங்கராபுரம் கடைவீதி மும்முனை சந்திப்பில் வி.சி., கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.ஒன்றிய செயலாளர் சந்திரன் தலைமை தாங்கினார். தொகுதி பொறுப்பாளர் சிலம்பன்கண்ணன், ஏழுமலை, சத்யராஜ், சக்திவேல் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.
17-Jan-2025