உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா

வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா

ரிஷிவந்தியம், : த.வெ.க., சார்பில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.பகண்டைகூட்ரோடு மும்முனை சந்திப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக வெற்றி கழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பரணிபாலாஜி தலைமை தாங்கினார். ரிஷிவந்தியம் தொகுதி ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். வீரமங்கை வேலுநாச்சியாரின் 295வது பிறந்தநாளையொட்டி அவரது உருவபடத்திற்கு மலர் துாவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் , த.வெ.க., நிர்வாகிகள் வெங்கடேஷ், யுவராஜ், பிரான்சிஸ், குமார், அய்யனார், விஜயகுமார், அய்யப்பன், வெள்ளையத்தேவன், பாரதி, மூர்த்தி, சத்தியராஜ், ஏழுமலை, சிலம்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை