உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு ஆர்.டி.ஓ., தலைமையில் ஆலோசனை

விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாடு ஆர்.டி.ஓ., தலைமையில் ஆலோசனை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, வாணாபுரம் ஆகிய 5 வட்ட பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் நடந்தது. தாசில்தார்கள் பசுபதி, கோவிந்தராஜ், வைரக்கண்ணு முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய ஆர்.டி.ஓ., லுார்துசாமி, விநாயகர் சிலைகள் களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு தற்காலிக கொட்டகைகள் ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும், சிலைகளில் உயரம் 10 அடிக்குள் இருக்க வேண்டும். சிலை பாதுகாப்பிற்காக 2 தன்னார்வலர்களை 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அமர்த்த வேண்டும். கோமுகி அணை, உ.கீரனுார் ஏரி, திருநாவலுார் ஏரி மற்றும் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட நீர்நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை விஜர்சனம் செய்ய வேண்டும். விநாயகர் சிலைகள் வைத்துள்ள இடம், விஜர்சனம் செய்யும் இடம் மற்றும் ஊர்வல பாதைகளில் பட்டாசு வெடிக்க அனுமதி கிடையாது. விழா மற்றும் ஊர்வலத்தை அமைதியாக சிறப்பாக நடத்திட அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறினார். வருவாய் ஆய்வாளர் அண்ணாமலை, நுகர்வோர் பாதுகாப்பு சங்க அருண் கென்னடி, இந்து முன்னணி மாவட்ட பொது செயலாளர் சக்திவேல், முன்னாள் நகராட்சி தலைவர் ரங்கன் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ