ஓட்டுப்பதிவு இயந்திரம் அறைக்கு சீல்
சங்கராபுரம்: சங்கராபுரம் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயர் மற்றும் சின்னம் ஓட்டுபதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் நடந்தது. இப்பணிகள் முடிந்து சங்கராபுரம் சட்டசபை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சிராஜூதீன் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வைரக்கண்ணன் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஓட்டு இயந்திரம்கள் பாதுகாப்பு அறையில் வைத்து, அறைக்கு சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.