உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணையாற்றில் உபரி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பெண்ணையாற்றில் உபரி நீர் திறப்பு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனுார் அணையின் முழு கொள்ளளவு நீர் மட்டம் 119 அடி(7321 மில்லியன் கன அடி). இதில் 114.15 அடி( 6,263 மில்லியன் கன அடி) கொள்ளளவு உள்ளது. சாத்தனுார் அணையில் அணையின் ஒழுங்குமுறை விதிகளின்படி தற்போது 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சாத்தனுார் அணையின் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கிருஷ்ணகிரி அணையிலிருந்து வினாடிக்கு 4 ஆயிரம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் சாத்தனுார் அணையில் இருந்து நேற்று பகல் 12:00 மணி முதல் வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி அளவு வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் நீர் படிப்பு பகுதியில் பெய்யும் மழையின் அளவை பொருத்தும், சாத்தனுார் அணைக்கு மேலே உள்ள அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவை பொருத்தும், சாத்தனுார் அணையில் இருந்து தென்பெண்ணையாற்றில் வெளியேற்றப்படும் உபரின் நீரின் அளவு மேலும் அதிகரிக்கலாம். எனவே, தென்பெண்ணை ஆற்றின் இரு கரையோரம் உள்ள மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !