உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பரோட்டா மாஸ்டர் கொலையா? கிணற்றில் சடலம் மீட்பு

பரோட்டா மாஸ்டர் கொலையா? கிணற்றில் சடலம் மீட்பு

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பரோட்டா மாஸ்டர் கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.உளுந்துார்பேட்டை தாலுகா, செங்குறிச்சியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் மகன் விஜய்,30; சென்னையில் பரோட்டா மாஸ்டராக வேலை செய்தவர், கடந்த ஒரு மாதத்திற்கு முன் வீட்டிற்கு வந்தார்.நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் திடீரென மாயமானார்.இந்நிலையில் அதே பகுதியில் உள்ள சுப்பராயன் என்பவரின், விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார்.உளுந்துார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விஜய் கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததால் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்குமா என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ