உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்தது

சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று உயர்ந்தது

திருக்கோவிலுார்: சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து சற்று அதிகரித்ததால், உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து தென்மேற்கு பருவமழையின் போது அதிகரித்தது. தற்பொழுது வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்திருக்கும் நிலையில், 119 அடி (7,321 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட அணையில் எதிர்வரும் பருவமழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு 113.05 அடி, (6,036 மில்லியன் கன அடி) இருப்பு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வரை நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 1,900 கன அடியாக இருந்தது. நேற்று இரவு 8:00 மணி அளவில் 2,100 கன அடியாக அதிகரித்தது. இதன் காரணமாக அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் 2,100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த சில நாட்களாக அணைக்கான நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில், நேற்று அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மீண்டும் அதிகரிக்க துவங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை